பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீனை காப்பாற்றவே முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகல் நாடகத்தை அரங்கேற்றினர் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸாமில் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு உதவினார் என்ற கடுமையான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ரிஷாட் பதியூதீனை காப்பாற்றும் நாடகத்தையே இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றனர்.
அதேபோல் முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள்.
முன்னாள் ரிஷாட் பதியூதீனும் தமது கட்சியின் தீர்மானத்திற்கு மீண்டும் பதவியேற்பார். 30 நாட்களுக்கு பின்னர், நாங்கள் பதவி விலகி நியாயமான விசாரணை நடத்தும் வரை காத்திருந்தோம்.
எங்கே எமக்கு எதிரான குற்றச்சாட்டு. எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதா? எனக் கூறி, ரிஷாட் பதியூதீன் அமைச்சர் பதவியை ஏற்று நாடகத்தை முடித்து வைப்பார் எனவும் முஸாமில் குறிப்பிட்டுள்ளார்.