தாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1999ம் ஆண்டு முதல், செயற்கைச் சூரியன் என்று அழைக்கப்படும், ‘சோதனைரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக்’ என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவதுபோல, இந்த இயந்திரத்தில் செயற்கையாக சூரியசக்தியை உருவாக்க முடியும்.
இதற்கான மீக்கடத்திப் பொருட்களை அமெரிக்கா தருவதாகக் கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.
இந்த இயந்திரம் வருகிற 2025ம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என்றும், 2050ம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.