கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைத்தார் ஞானசார தேரர். கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் கருத்து தெரிவித்த போது,
இந்த பிரச்சினை 5 நாளிலும் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி என்னால் பெற்று தர முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் இதனை செய்து தருவேன்.
பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது .எங்களினால் அந்த பேச்சு வார்த்தை ஆரோக்கியமாக முற்று பெரும் என நம்புகின்றேன்.இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்.எனவே தான் எமது அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் நாம் செயற்படுவோம்.
ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்பட முன் வர வேண்டும்.விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்கின்ற அந்த செய்தி மிக விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.
இதன் போது பலத்த கரையோசம் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்தில் கல்முனையை தரமுயர்த்துவாராம் ஞானசாரர்: உண்ணாவிரதம் முடிந்தது; அடையாள போராட்டம் தொடர்கிறது!
ஒரு மாதத்தில் கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படும் என்ற ஞானசார தேரரின் கோரிக்கையை ஏற்று, கல்முனை விகாராதிபதி உள்ளிட்ட நால்வர் உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்தனர். தமிழ்தேசியகூட்டமைப்பு கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிரந்தர முடிவு கிடைக்கும்வரை அடையாள உண்ணாவிரதம் தொடரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.