XX (41)
ஏழாலை
எனக்கு மது அருந்தினாலே உடலுறவு கொள்ளலாம். ஆனால் அதை மனைவி விரும்பவில்லை. என்னால் மது அருந்தாமல் உடலுறவு கொள்ள முடியவில்லை. இதனால் எமக்குள் இப்பொழுது கொஞ்சம் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வதால் ஏதாவது பிரச்சனையுள்ளதா?
டாக்டர் ஞானப்பழம்: தம்பி, மது அருந்துவதே உடலுக்கு கூடாது என்பதை நீண்டகாலமாக விஞ்ஞான முடிவுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மது அருந்துவதால் உடலுறவிற்கு ஏதும் பாதிப்பிருக்கிறதா என இப்பொழுது நீங்கள் கேட்கிறீர்கள்.
மது அருந்திய பின்னர், உடலுறவு வைத்துக்கொள்வது தவறு.
அடிக்கடி அல்லது அதிகமாக மது அருந்துவது, டெஸ்டோஸ்டீரான் சுரப்பைக் கணிசமாகக் குறைத்துவிடும். ஆண்மைத் தன்மைக்கும், ஆண்கள் தாம்பத்யத்தில் ஈடுபாட்டுடன் இருக்கவும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அவசியம். மது அருந்துவதால், பெண்களுக்குரிய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது படிப்படியாக அதிகரிக்கும்போது ஆண்கள், பெண் தன்மையுடைய ஆணாக (Girly Man) மாற்றம் அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களால், முழுமையாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியாமல் போகும். பெண்களைத் திருப்திப்படுத்தவும் முடியாது.
மது அருந்திவிட்டு உடலுறவுகொண்டால், அதிக நேரம் செயல்பட முடியும் எனப் பல ஆண்கள் நம்புகிறார்கள். மது அருந்தியிருக்கும்போது, மூளை துண்டப்பட்டு, ‘பீட்டா எண்டார்பின்’ (Beta-Endorphin) எனப்படும் ஒரு புரதம் வெளியாகிறது. வலி உணர்வை மறக்கடிக்கச் செய்யும் இந்த எண்டார்பின்கள், நரம்பு மண்டலத்தில் புரியும் வேதி வினையால், போதை உணர்வு உண்டாகிறது. இவை, டெஸ்டோஸ்டீரான் சுரப்பைக் கணிசமாகக் குறைத்து விடுபவை. எனவேதான், மது அருந்திவிட்டு உடலுறவுகொள்ளும்போது, விந்து வெளியேறுவது தாமதப்படுகிறது. இதைத்தான், ‘அதிக நேரம் செயல்படுகிறோம்’ என்று மெச்சிக்கொள்கிறார்கள் விவரம் அறியாத ஆண்கள்.
அதிகமான மது, ஈஸ்ட்ரோஜென் எண்ணிக்கையை அதிகரிப்பதால், விரைவில் முதுமை ஏற்படும், உடல் பருமனும் கூடும். அவர்களால் தாம்பத்யத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, செக்ஸ் திறனைக் குறைக்கும் மதுவைக் கைவிடுவதே நல்லது.
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இன்னொரு அர்த்தம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்!
YY (37)
ஓட்டமாவடி
எனக்கு ஒரு குறைபாடு. உடலுறவின்போது விரைப்புத்தன்மை குறைந்து விடும். அல்லது விரைவாக விந்து வெளியேறி விடுகிறது. ஆனால் மனைவி தான் உச்சமடைவதில்லையென்கிறார். எப்படி இதை சரிசெய்வது?
டாக்டர் ஞானப்பழம்: தம்பி, விரைப்பு தன்மை குறைவது ஒரு குறைபாடல்ல. அது தீர்க்க முடியாத பிரச்சனையுமல்ல. உங்களை நீங்கள் ஆள்பவர் என்றால், அதை உடனடியாக தீர்க்கலாம்.
தாம்பத்ய உறவில் நான்கு நிலைகள் உள்ளன. உணர்ச்சி உண்டாகுதல் (Mood), உடல் உறவுகொள்ளுதல் (Sexual Intercourse), உச்சநிலை (விந்து வெளியேற்றம்), திருப்தியடைதல் என நான்கு நிலைகளைக் கடந்தால்தான் தாம்பத்ய உறவு முழுமையடையும். சங்கிலித் தொடர் போன்ற இவற்றில் ஒன்று விடுபட்டாலும், நிறைவிருக்காது.
பொதுவாகவே, ஆண்களுக்கு விரைவில் உணர்ச்சி உண்டாகி, விரைப்பு ஏற்பட்டுவிடும். மோகமும் விரைவாகத் தீர்ந்துவிடும். பெண்கள் நிலையோ அப்படியே தலைகீழ். தாமதமாக உணர்ச்சி தூண்டப்படும்; உச்சமும் தாமதப்படும். இதைச் சமன் செய்ய, செக்ஸ் முன் விளையாட்டுகள் (Foreplays) அவசியம். விரைப்புத் தன்மை குறைவால், உச்சம் தொடுவதற்கு முன்னரே ஆண் செயல்படாமல், உறவு பாதியில் தடைப்பட்டால் தாம்பத்யம் கசந்துவிடும்.
உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என இரு காரணங்களால் விரைப்புத் தன்மை குறைபாடு உண்டாகலாம். தகுந்த பரிசோதனைகள் மூலம் அதைக் கண்டறிந்து, சிகிச்சையளித்தால் குணப்படுத்திவிடலாம். செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதைச் சரிசெய்யலாம். அளவுக்கு மீறிய மது, புகைபிடித்தல், டெஸ்டோஸ்டீரான் குறைபாடுகள், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களாலும், அவற்றுக்காகச் சாப்பிடும் மருந்துகளாலும் விரைப்புக் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
உறக்கமின்மை, மனஅழுத்தம், பயம், குழப்பமான மனநிலை, எந்த நேரத்திலும் எதையாவது எண்ணி பயந்துகொண்டே இருப்பது போன்ற உளவியல் சிக்கல்களும் காரணமாக இருக்கலாம். கவுன்சலிங் கொடுத்து இவற்றைச் சரிசெய்யலாம். ஒரு சினிமாவை முதல் நாளே அல்லது அடுத்த நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏன் ஏற்படுகிறது? காரணம், படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை உங்களுக்கு ஏற்படுத்தியதுதான். இது, உடலுறவுக்கும் பொருந்தும். செக்ஸுக்கு முன்னர் அதைப் பற்றி துணையுடன் பேச வேண்டும்; அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும். மனதில் அந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டால், விரைப்புத் தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச்செய்யும் கொலஸ்ட்ரால் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்; ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை அதிகரிக்கும் புரத உணவுகளைக் குறைவாகச் சாப்பிடலாம். வோக்கிங், ஜோகிங் தவிர, பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தும், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை அதிகரிக்கலாம். சிகிச்சை, வாழ்வியல்முறை மாற்றங்களால் விரைப்புத் தன்மை குறைபாட்டை எளிதில் குணப்படுத்தலாம். அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.