நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்று கொண்டார், 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 55 மக்களவை தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று, காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.
தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மே 25ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டதில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கமிட்டியும், கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ராகுல் காந்தி பதவி விலக வேண்டாம் என அவரை கேட்டு கொண்டனர். இதனால் அமைதியாக இருந்த ராகுல் தற்போது மீண்டும் பதவி விலக முடிவெடுத்து அதில் உறுதியாக உள்ளாராம்.
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் காந்தியின் முடிவுவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்கும் பட்சத்தில்,
மாற்றுத் தலைவரை தேர்தெடுக்கும் பணியை, காங்கிரஸ் முடுக்கிவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.