மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளைஞர் மற்றும் 20 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் தேடி கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு ஊர் நடுவில் இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்தனர். இவர்கள் இருவரையும் சவுக்கால் அடித்து சித்திரவதை செய்தனர்.
மேலும், திருமணம் செய்த பெண்ணின் தலைமுடியை இழுத்து துன்புறுத்தினர். குச்சி, கட்டை போன்றவற்றால் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். இரண்டு மணி நேரமாக இந்த சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளானார்கள். இதனை பார்த்து பொறுக்க முடியாத சில கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே இருவரின் குடும்பத்தினரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த குடும்பம் இளைஞரின் குடும்பத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்களை தாக்கிய நாள் வரை நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.