தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 1 கப்,
பேபிகார்ன் – 12,
கார்ன்ஃப்ளவர் – 1 டீஸ்பூன்,
அரிசிமாவு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – சுவைக்கேற்ப,
ஆப்ப சோடா – சிட்டிகை
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – 3 பல்.
செய்முறை:
பேபிகார்னை நன்றாக சுத்தம் செய்து, பின்னர் அதனை ஒரு 10 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் போட்டு வைத்து பின்னர் எடுத்துக்கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அதன்பின்னர், ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கரைத்து கொள்ளவும்.
அந்த அரைத்த கரைசலில் பேபி கார்னையும் முக்கி எடுத்து, அடுப்பில் எண்ணெயை காயவைத்து அதில் பொரித்து எடுக்கவும்.
சுவையான ஸ்பெஷல் பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.!!