ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில் ஸூ என்பதற்கு நல்லது என்றும் அஸ்தி என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது. இந்த பழைய அற்புதமான அடையாளம் மனிதனால் கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னரே கற்களிலும், பாறைகளிலும் மற்றும் குகைகளிலும் செதுக்கி வைக்கப்பட்ட பழமையான ஒன்றாகும்.
இந்த சின்னத்தை உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட சின்னமாக அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.சரி வாங்க இந்த அடையாளத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.
செல்வம் பெருக
இந்த சின்னம் நாம் மனதார கும்பிடும் கணபதியின் இடது கையில் பெயர்க்கப்பட்டு இருக்கும். இந்த சின்னம் கடவுளின் இருப்பிடம் என்றழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் வசிக்கும் இடமாகும். இந்த ஸ்வஸ்திகா அடையாளம் வரையப்பட்ட இடத்தில் செல்வமும் செழிப்பும் பொங்கிப் பெருகும்.
எதிர்மறை ஆற்றலை அழிக்க
ஸ்வஸ்திகா நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை அழிக்கக்கூடியது. வாஸ்து சாஸ்திரம் படி இந்த அடையாளத்தை நல்லதுக்கா வீட்டில் வைப்பார்கள். வீட்டில் அதிர்ஷ்டத்தையும் நிம்மதியையும் கொடுக்க வல்லது.
சமண மதத்தில்
சமண மதத்தின் ஏழாவது துறவி ஸ்வஸ்திகா அடையாளத்தை குறிப்பிடுகிறார். இந்த அடையாளத்தில் குறிப்பிட்டுள்ள நான்கு கைகளும் கடிகார திசையில் இருப்பது நான்கு மறுபிறப்பு இடங்களை குறிக்கிறது என்கிறார். நம் மறுபிறப்பு என்பது இவ்வுலகில் மிருகமாகவோ அல்லது தாவரமாகவோ இருக்கலாம் அல்லது நரகத்தில் அல்லது பூமியில் அல்லது ஆன்ம உலகில் இப்படி நான்கு உலகை குறிக்கிறது என்கிறார்.
நாஜி இணைப்பு
தற்போது நினைத்தால் கூட உலகமே அஞ்சி நடுங்கும் மாவீரன் அடால்ப் ஹிட்லரின் கூற்றுப்படி இந்த ஸ்வஸ்திகா அடையாளம் “ஆர்ய மனிதனின் வெற்றிக்கான போராட்டத்தின் குறிக்கோளை குறிப்பதாக” தன்னுடைய நாஜி கட்சி கொடியில் அடையாளமாக்கப்பட்டுள்ளது என்றார். இந்த அடையாளம் தங்களுடைய படைப்பாற்றல் மூலம் வெற்றியை தக்க வைக்கும் அற்புதமான அடையாளமாக உள்ளது என்பதால் தன் போராட்ட கொடியில் பதித்தார்.
பொறிக்க வேண்டிய இடங்கள்
இந்த அடையாளத்தை உங்கள் வீட்டின் நுழைவு வாசல், கல்லாப் பெட்டி, பணப்பெட்டி, கணக்குப் புத்தகங்கள், பூஜை அறை போன்றவற்றில் பொரித்து வைக்கலாம். சகல இடங்களிலும் மங்களகரமான சின்னமாக இது விளங்கும்.