ஸ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைக் கட்சியின் மத்திய செயற்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரையில் அது குறித்து கற்பனை அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிடக்கூடாது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கருத்து முரண்பாடு வெடித்துள்ளது.
எனினும், அமைச்சர்களான தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார, அஜித் பி பெரேரா ஆகியோர், சஜித் பிரேமதாஸவே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்து வருகின்றனர்.
இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இத்தகைய அறிவிப்புகள் கட்சியின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தந்தையின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் காலம் மலையேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.