Loading...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள காணியொன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 10 ஏக்கர் வரையான பகுதியில் நின்ற பனை, தென்னை மரங்கள் எரிந்தழிந்தன.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டின் கொண்டு வந்துள்ளனர்.
Loading...
எனினும், 200க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகின.
மட்டக்களப்பு பொலிஸார் துவிபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Loading...