பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்திற்கான வாடகையை செலுத்த முடியாத காரணத்தினால், அதனை புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவர்களிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் அந்த அலுவலகத்தில் அறை ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இதன கூறியுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அலுவலகம், ஜீ.எல்.பீரஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பணிகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து மகிந்த ராஜபக்ச வாடகை செலுத்த முடியாததால், அலுவலகத்தை கைவிட்டதாகவும் இதன் பின்னர் பசில் ராஜபக்ச தரப்பினர் வாடகை செலுத்தி அதனை பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரே இதுவரை தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினர் இந்தளவுக்கு வறியவர்களாக மாறியுள்ளதை எண்ணிப்பார்க்க முடியாதுள்ளதாகவும் இதனால், உதய கம்மன்பில செய்தது போல் மக்களிடம் இருந்து 100 ரூபா நிதியுதவியை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்