Loading...
சோபா உடன்படிக்கையினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
சோபா உடன்படிக்கையானது அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும், இந்த உடன்படிக்கையின் ஊடாக அமெரிக்கர்கள் இலங்கையில் குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த முயற்சியை தோற்கடிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...