உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் “ஸ்ரீ ஐயப்ப சாமி கோயில்” என்று மாற்றப்பட்டுள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 5ஆம் திகதி நடந்த தேவசம் போர்டு கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இது அமலுக்கு வந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில், சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் என்று அழைக்கப்படுவது வழக்கம்.
அது இனிமேல் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சாமி கோயில் என்று அழைக்கப்படும்.
பெயர் மாற்றம் தொடர்பான உத்தரவையும் போர்டு பிறப்பித்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சபரிமலையில் ஐயப்பன் கோயில் உள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வருடாவருடம் பக்தர்கள் படையெடுக்கின்றனர்.
தற்போது ஐயப்பனுக்கு மாலை போட்டு அதிகளவானோர் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.