வவுனியாவில் லட்ச லட்சமா செலவு செய்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். வறுமையில் வாடும் இந்த மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு இங்கு ஒரு அதிகாரி கூட இல்லையா…?? என்பதுதான் வேதனைக்குரியது என்று மக்கள் ஆதங்கப் படுகிறார்கள்.
இங்கு பேருக்காகவும் பொன்னாடைக்காகவும் அலைகின்றார்களே தவிர,உண்மையான சமூக அக்கறை இல்லாதவர்கள் தான் இவர்கள் என்று, மக்கள் குமுறுறி வெடிக்கிறார்கள்….!!
எல்லாம் அரசியல் நோக்கத்திற்கான முன்னெடுப்புக்களே தவிர, உண்மையான சமூக அக்கறையை இது காட்டவில்லை என்று, புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
வவுனியாவில் இவர்களைப் போன்ற பலர், பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதை காண முடிகிறது. இதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கு இவ்விடயத்தைப் பற்றி எடுத்துக் கூறிய போது, இதற்கும் தங்களுக்கு எதுவித சம்பந்தம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.
எனவே, உரிய அதிகாரிகள் இவர்களுக்கான மனிதநேய உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்வதாக அறிய முடிகிறது…