Loading...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 27ஆம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பொதுகுழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் சங்க உறுப்பினர் நடிகர் ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. விஷால் வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
Loading...