டெல்லி நகரில் இருக்கும் ஜாகிர் இரயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் இறந்து கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த குலகேஷ் என்ற வாலிபரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில்., முன்னுக்கு பின்னர் முரணாக காவல் துறையினரிடம் பதில் அளிக்கவே., அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சமயத்தில்., சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபர் குலகேஷின் தோழர் தல்பீர் (வயது 30) என்பதும்., தல்பீரை அடித்து சுயநினைவின்றி தண்டவாளத்தில் கொண்டு வந்து போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில்., தல்பீரின் மனைவிக்கும் – குலகேசுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களுக்குள் மலர்ந்த கள்ளக்காதலில் உல்லாசம் அனுபவித்த நிலையில்., குல்கேஷிற்கு தல்பீரின் மனைவியை திருமணம் செய்ய ஆசை வந்து., இது குறித்து குலகேசின் மனைவியிடம் தெரிவித்த போது அவர் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பனை தனிமையில் அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.