தேவையான பொருட்கள் :
எலுமிச்சம் பழம் – 2,
பச்சரிசி – 1 கப்,
பீன்ஸ் – 15,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
கேரட் – 1,
இஞ்சி – 1 துண்டு,
பட்டாணி – அரை கப்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3,
உளுந்து – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,
முந்திரி – 10,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை :
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து அரிசியை உதிரியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
காய்கள், பச்சை மிளகாய், இஞ்சி, ஆகியவற்றை பொடி,பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றை வறுத்து பின்னர், காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
காய்கறி வெந்தவுடன் எலுமிச்சம் பழச் சாறு தெறித்து இறக்கவும். இதனை வேகவைத்த சாதத்தில் கொட்டி உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெஜிடபுள் எலுமிச்சை சாதம் தயார்.!!