பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெப்ப அலை மாசு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதால் பெரும்பாலான மாசுபடுத்தும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிஸில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கட்டாயத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியாஸை எட்டிய நிலையில், பாரிஸ் மற்றும் புறநகர் பகுதியான Petite Couronne-யில் மாசு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் பெரும்பாலான மாசுபடுத்தும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, A86 க்குள் உள்ள சாலைகளில் Crit’Air 3 பதிவு செய்யப்படட வாகனங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. Crit’Air 0, 1 அல்லது 2 பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளவர்கள், மின்சார வாகனங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Crit’Air 3-ல் மட்டும் சுமார் ஒரு மில்லயன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வார நாட்களில் Crit’Air 5 பதிவு வாகனங்களை பாரிஸில் ஓட்ட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் Crit’Air 4 பதிவு வாகனங்கள் எதிர்வரும் யூலை 1ம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது.
தடை செய்வதோடு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளை தங்கள் கார்களை வீட்டிலேயே விட்டுவிட்டு பொது போக்குவரத்து அல்லது மாசுபடுத்தாத போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இலவசமாக வீட்டின் அருகே வாகனங்களை நிறுத்திக்கொள்ள நகர அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், நெடுஞ்சாலைகளில் வேக வரம்பு குறைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.