கொழும்பில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
குறித்த விடயம் இன்று நீதிவான் ரங்க திஸாநயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது விஷேட மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும், பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அது தொடபான விசாரணைகளை சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக நிசாந்த சில்வா மன்றில் தெரிவித்துள்ளார்.