கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவ போட்டியின் முன்னாள் போட்டியாளரான றோறி ஸ்ருவேர்ட் தனது ஆதரவை ஜெரமி ஹண்ட்-க்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
றோறி ஸ்ருவேர்ட் கடந்த வாரம் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் மூன்றாவதுகட்ட வாக்கெடுப்பின்போது மிகக்குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் எஞ்சியுள்ள இரு போட்டியாளர்களில் யாருக்கு தனது ஆதரவு என்பதை வெளியிட்டுள்ள ஸ்ருவேர்ட்,
“நான் பொரிஸ் ஜோன்சனின் ஆதரவாளர் இல்லை, நான் அவருடைய அமைச்சரவையில் பணியாற்ற மாட்டேன், எனவே நான் ஜெரமி ஹண்ட்-ஐ ஆதரிக்கிறேன். ஜோன்சனை விட ஹண்ட் சிறந்த பிரதமராக இருப்பாரென நினைக்கிறேன்.
புதிய அரசாங்கம் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முயன்றால் அதை தடுப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பேன், ஆனால் அரசாங்கத்தை வீழ்த்தி பொதுத்தேர்தலைத் தூண்டுவதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.