ஜேர்மனி நகரம் ஒன்றில் நீச்சல் குளம் ஒன்றில் குளிக்க சென்ற 38 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர்.
Hesseஇல் உள்ள நீச்சல் குளம் ஒன்றில், தண்ணீரில் கிருமி நீக்கம் செய்வதற்காக சேர்க்கப்படும் குளோரினின் அளவு அதிகரித்ததையடுத்து இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நீந்த சென்ற பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு, கடுமையான இருமலும், தோலில் பயங்கர அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு, 30 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
பாதிக்கப்பட்டவர்களில் எட்டுப்பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
முதலில் அன்று பிற்பகல் வரை மூடப்பட்ட நீச்சல் குளம், மீண்டும் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நிகழ்ந்த தவறுக்கு நீச்சல் குளத்தின் பொறுப்பாளர்கள் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.