கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான இறைச்சி உற்பத்தி வகைகளுக்கும் சீனா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
போலி சுங்கச் சான்றிதழ்கள் இருப்பதாகக் கூறியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பிளவடைந்து வருவதற்கான சமீபத்திய அறிகுறியாக இந்த விடயம் நோக்கப்படுகின்றது.
கனடாவில் உள்ள சீன தூதரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய நிறுவனமான ஃப்ரிகோ றோயல் கடந்த ஜூன் 3ம் திகதியன்று அனுப்பிய பன்றி இறைச்சியில் “ரக்டோபமைன் எச்சங்கள்” கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்த முடிவை எடுக்க தூண்டப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ரக்டோபமைன்’ ஒரு கால்நடை ஊக்க மருந்து மற்றும் தீவன சேர்க்கையாகும். இது சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் நுகர்வோரின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளை கருத்தில் கொண்டு தடைசெய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புக்கான ஹொங்கொகாங் மையம் தெரிவித்துள்ளது
எனினும், அந்த ஊக்க மருந்துகள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இன்றளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.