வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்…
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுவைகள் வரப்பிரசாதங்கள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு, அரச ஊழியர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் வரவு செலவுத்திட்டத்தை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழில்சார் நிபுணர்களுடனும் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்க மத்திய செயற்குழுக் கூட்டமொன்று எதிர்வரும் 29ம் திகதி கூட்டப்பட உள்ளது.
அரச சேவையில் இணைந்து கொள்ளும் நபர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியக் கொடுப்பனவு திட்டத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.