எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகபெரிய விமானம் ஒன்று ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது புயலில் சிக்கி கடுமையாக தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் Schiphol விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகபெரும் பயணிகள் விமானமான A380 தரையிறங்க முயற்சித்துள்ளது.
அங்குஸ் புயல் கடுமையாக தாக்கி வரும் நிலையில் குறித்த விமானம் தரையிறங்குவதில் முயற்சி மேற்கொண்டுள்ளது வீடியோவாக தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதுபோன்ற அவசர நிலையில் Crab எனப்படும் யுத்தியை பயன்படுத்தி விமானிகள் விமானத்தை தரையிறக்குவதாக கூறப்படுகிறது.
குறித்த விமானத்தையும் அதே யுத்தியை பயன்படுத்தி விமானி தரையிறக்கியுள்ளார். ஒருபக்கம் சரிந்த வண்ணம் விமானம் ஓடுதளத்தை அணுகியுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதே பாணியை பயன்படுத்தும்போது சமயங்களில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னால் பிரித்தானிய விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திறமையான விமானியால் மட்டுமே குறித்த பாணியை திறம்பட கைய்யாள முடியும் எனவும், அதற்கு பயணிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.