இத்தாலியில் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஹோட்டல்களில் இலவச தங்கும் வசதியை ஏற்பாடு செய்துள்ளது அந்த நாட்டு தன்னார்வ அமைப்பு ஒன்று.
இத்தாலியில் உள்ள பிரபல நகரங்களில் ஒன்று அசிசி. இங்குள்ள தன்னார்வ அமைப்பு ஒன்று அரசின் புது திட்டமான பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் வேறுபட்ட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி அசிசி நகரத்தில் உள்ள ஹோட்டல்களில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச தங்கும் வசதி ஏற்பாடு செய்துள்ளது. குறித்த வசதியை பெற வேண்டும் என்றால், அசிசி நகரில் தங்கும்போது கர்ப்பமடைந்ததற்கான சான்றுகளை ஹோட்டல்களில் சமர்ப்பித்தால் போதும் என்று கூறப்படுகிறது.
இந்த விசேட சலுகை கர்ப்பிணி பெண்களுக்கும், குறித்த நகரில் தங்கிய போது கர்ப்பமடைந்த பெண்களுக்கும் பொருந்தும் என்று குறித்த திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட திட்டத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இணைந்துள்ளதாகவும், மேலும் பலர் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே குறித்த திட்டத்திற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை சென்று நகரத்தின் மேயர் ஸ்டெஃபானியா அறிவித்துள்ளார். மட்டுமின்றி குறித்த திட்டத்தால் தங்களின் நகரத்திற்கு ஏதும் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் சில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி இந்த திட்டமானது அசிசி நகரை பொறுத்தமட்டில் பொருத்தமற்றது எனவும், இந்த நகரம் போப் பிரான்சிஸ் பிறந்த இடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர குவிந்துவரும் நிலையில், இத்தாலியின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்த திட்டத்தை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.
கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்தே இத்தாலியின் பிறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2015ல் மட்டும் இங்கு 488,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர்.
இத்தாலி ஒரு நாடாக ஒருங்கிணைந்து செயல்பட்ட 1861 ஆம் ஆண்டில் இருந்தே கடந்த ஆண்டு மட்டுமே மிகவும் குறைவான பிறப்பு விகிதத்தை இத்தாலி பதிவு செய்துள்ளது.