Loading...
வென்னப்புவ பிரதேசசபைக்குட்பட்ட தங்கொட்டுவ வாராந்த சந்தையை அனைத்து சமூகமும் பாவிப்பதில் எந்த தடையும் இல்லையென மாரவில நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேசசபை தலைவர் கடந்த வாரம் அதிரடி முடிவெடுத்து, வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாதென உத்தரவிட்டிருந்தார்.
Loading...
இந்த உத்தரவிற்கு எதிராக மாரவில நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றையதினம் தவிசாளரை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படியும் கூறியிருந்தது.
இன்று இந்த விவகாரத்தை ஆராய்ந்த நீதிமன்றம் அனைத்து சமூக மக்களும எந்த தடையுமின்றி தங்கொட்டுவ வாராந்த சந்தையை பாவிக்கலாம் என தீர்ப்பளித்தது.
Loading...