Loading...
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Loading...
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, தான் வீசிய முதல் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னேவை ஆட்டமிழக்க செய்தார்.
அவர் அடித்த ஷாட்டை தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளிசிஸ் கேட்ச் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினார்.
Loading...