மிஸ் அவுஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ (26) வென்றுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்தவர், இவரது பெற்றோர்கள் இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.
போட்டியில் பங்கேற்ற மற்ற பெண்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய பிரியா மெல்போர்னில் நேற்றிரவு (வியாழக்கிழமை) நடந்த போட்டியில் மிஸ் யுனிவர்ஸ் அவுஸ்திரேலியா 2019 ஆக மகுடம் சூட்டப்பட்டார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் (உலக அழகி) போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.
போட்டியில் வெற்றிபெற்ற பின் பிரியா கூறுகையில்.
“நான் இன்னும் பன்முகத்தன்மையைக் காண விரும்புகிறேன். என்னைப் போல தோற்றமளிக்கும் ஒருவர், எனது பின்னணி போன்றவைக்கெல்லாம் வெற்றி என்பது நிச்சயம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இது எனக்கு முதல் அழகிப் போட்டி. நான் இதற்கு முன்பு ஒரு போட்டியில் நுழைந்ததில்லை. நான் இதற்கு முன்பு ஒரு மொடலிங் செய்யவில்லை… நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். ஆனால் போட்டியில் வென்று மிஸ் அவுஸ்திரேலியா பட்டம் வென்றது சற்று பெரிய ஆச்சரியம்தான்“ என்றார்.
சட்டம் படித்துள்ள பிரியா மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார். செராயோ இந்தியாவில் பிறந்தார். அவரது குடும்பம் அவுஸ்திரேலியா வந்து இறுதியாக குடியேறுவதற்குமுன்பாக ஓமன் மற்றும் துபாய் போன்ற இடங்களில் பணி நிமித்தமாக வாழ்ந்து வந்தனர்.