மன்செஸ்ரர், பரி (Bury) நகரில் உள்ள ஏர்வெல் ஆற்றில் 12 வயதுச் சிறுமி நீரில் மூழ்கியதால் அப்பிரதேசம் சோகமயமாகியுள்ளது.
சிறுமி கடைசியாக நேற்று வியாழக்கிழமை இரவு 7:55 அளவில் ஏர்வெல் ஆற்றின் அருகிலுள்ள டன்ஸ்ரர் வீதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
சிறுமியைக் காணவில்லை என்ற அறிவிப்பினை அடுத்து உடனடியாக அவசரசேவைகள் பிரிவின் தேடுதல்குழு ஆற்றில் இறங்கி தேடுதலை மேற்கொண்டபோது சிறுமியின் உடலை கண்டெடுத்தனர்.
சிறுமி ஆற்றில் மூழ்கியமை குறித்துத் தெரிவித்த பொலிஸார் இது ஒரு துயரமான சம்பவம் என்று கூறியதுடன், இந்த விடயத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகக் கருதவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மன்செஸ்ரர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த துப்புத்துலங்கல் அதிகாரி ஆண்ட்ரூ நைஸ்மித் கூறுகையில்; ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் விளையாடவோ நீந்தவோ கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் மக்களை குளிர்ந்த நீருக்குள் செல்லத் தூண்டுகிறது. ஆனால் அவ்வாறு யாரும் செய்யவேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.