லட்சங்கள், கோடிகள் செலவழித்தும் படிப்பு தலையில் ஏறாமல் பணத்தை வீணடிக்கும் குடும்பங்களை நாம் பார்க்க முடியும். அதே போல படிக்க பணம் ஒரு தடையாக இருப்பினும் அதை தகர்த்து தவிடுபொடியாக்கி எட்டாக்கனியாக இருக்கும் படிப்பை எட்டி பறிக்கும் குழந்தைகளையும் நாம் பார்க்க முடியும்.
இதோ அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மற்றுமொரு ஆறு வயது பெண் குழந்தை ஜி ஹாங் ஹாங்
ஜி ஹாங் ஹாங் ஆறு வயது பெண் குழந்தை. வார இறுதியில் அனைவரும் விளையாடி, கேளிக்கை சம்பவங்களில் ஈடுபட்டு நாட்களை கழிப்பார்கள்.
ஆனால், ஜி ஹாங் ஹாங் வார இறுதிகளில் பிச்சை எடுத்து தன்னை படிக்க வைக்கும் தந்தைக்கு உதவியாக நடுங்கும் குளிரில் உட்கார்ந்த பாடம் பயில்கிறார்.
குளிர் தாங்காமல், ஒரு போர்வையை கூடாரம் போல அமைத்து அதற்குள் அமர்ந்து புத்தகத்தை படித்தபடி அமர்ந்திருக்கிறார் ஜி ஹாங் ஹாங் எனும் குட்டி தேவதை.
வார இறுதி நாட்களை எல்லா குழந்தைகளும் விரும்பும் பட்சத்தில் ஜி ஹாங் ஹாங் வெறுக்கிறார். ஏனெனில், பிச்சை எடுக்கும் நேரத்தில் வீட்டு பாடம் செய்வது தடைப்பட்டு போகிறது என இக்குழந்தை கூறுகிறது. ஆனால், இந்த ஏழ்மையோ, பிச்சை எடுக்கும் நேரமோ இவரது படிப்பை கெடுக்காமல் பார்த்துக் கொள்கிறார் ஜி ஹாங்.
பத்து டிகிரி செல்சியஸில் நாமே வெளியே செல்ல தயங்குவோம். உடல்நிலை ஈடுகொடுக்காது. ஆனால், ஜி ஹாங் ஹாங் தந்தைக்கு உதவிக் கொண்டு இந்த குளிரிலும் படித்து வருகிறார். இந்த தொடர் நிகழ்வு சீனா செய்து ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.
குளிரில் நடுங்கிக் கொண்டு படித்துக் கொண்டிருந்த இந்த குட்டி தேவதையை கண்ட ஒரு நல்ல உள்ளம், உடனே அருகில் இருந்த கடைக்கு சென்று அவருக்கு உணவு வாங்கி வந்துக் கொடுத்துள்ளார்.
ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடம் முடித்தாலும். தந்தை மேலும், ஐந்து பக்கங்களுக்கு சீன வார்த்தைகள் சரியான எழுத்துக்களில் எழுத பயிற்சி அளிக்கிறார். ஜி ஹாங் ஹாங் வளர்ந்து நல்ல நிலை அடைய வேண்டும். ஜி ஹாங் ஹாங்கின் அம்மாவிற்கு மனநலம் சரியில்லாமல் இருக்கிறார். இவரது அண்ணனும் பள்ளியில் பயின்று வருகிறார். குடும்ப வருமானத்திற்கு இதை தவிர வேறு வழி இல்லை.
ஜி ஹாங் ஹாங் தான் அவரது வகுப்பில் நம்பர் ஒன் ஸ்டூடன்ட்!