பாக்யராஜ் உடன் சுந்தரகாண்டம், ராசுக்கு குட்டி, அம்மா வந்தாச்சு படத்திலும், அருணாச்சலம் படத்தில் ரஜினியுடனும், நடித்தவர் நந்தகோபாலன்.
மெக்கானிக்காக தொடங்கிய இவரின் வாழ்க்கை சினிமாவில் நடிகராகவும் பயணம் எடுத்தது. வெங்கடேஷ் மூலம் பாக்யராஜ்க்கு அறிமுகமானார்.
அவரின் மூலமாக இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தனைக்கும் நடிக்கும் ஆசை அவருக்கு இல்லையாம். நள்ளிரவில் நந்தகோபாலனின் வீட்டை கதவை தட்டினார்களாம்.
அப்படியாக வந்தவர் சினிமா படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். திடீரென ஒரு நாள் அவருக்கு காய்ச்சல் குளிர் வந்து வீட்டிற்குள் கூட நடக்க முடியாத அளவிற்கு முடங்கிபோனாராம்.
எந்த வித தொடர்பும் இல்லாமல் பலவருடங்கள் கழித்து அண்மையில் நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது சந்தித்த பாக்யராஜ் அதிர்ச்சியானாராம்.
தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் வாழ்க்கையில் தற்போது நடிகர் சங்கத்தின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறாராம்.