அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தை சேர்ந்த விமானி ஒருவர் முதன்முறையாக விமானத்தில் பயணித்த இளம்பெண்ணை பயமுறுத்தி தன்னுடைய காதலை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தை சேர்ந்த டேவிட் சிங்கா (25) என்கிற விமானி, தன்னுடைய காதலி மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவருடன் விமானத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அதில், அவருடைய காதலி தான் துணை விமானியாக பயணித்துள்ளார். 5000அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதாக விமானி கூறுகிறார்.
அதனை தாங்களும் உணர்வதாக பின் பக்கத்தில் இருந்த அந்த நண்பர்களும் கூற, அந்த இளம்பெண் அவற்றை அப்படியே நம்ப ஆரம்பிக்கிறார்.
அப்போது டேவிட் அங்கு குறிப்பிடப்பட்டிருந்த விமானம் இயக்குவதான அறிவுறுத்தல்களைப் படிக்க சொல்கிறார். முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் அந்த இளம்பெண்ணும் பயத்துடனே அதில் இருப்பவற்றை வாசித்து கொண்டிருக்கிறார்.
விமானி தன்னுடைய துணை விமானியை எப்பொழுதும் காதலிக்கிறார். நீங்கள் விமானியை திருமணம் செய்துகொள்ள சம்மதமாக என எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்ததும் சந்தேகமடைந்த அந்த இளம்பெண், தன்னுடைய விமானியை உற்றுநோக்குகிறார். அப்போது அவர் சிரித்தபடியே கையில் ஒரு மோதிரத்தை எடுத்து காட்டுகிறார்.
இதனை பார்த்த அந்த பெண் கண்களில் நீருடன், ‘நீ என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாயா’ என கேட்கிறார். உடனே டேவிட், ஆம் எனகூறிக்கொண்டே விரலில் மோதிரத்தை மாட்டி விடுகிறார். இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.