இந்த உலகில் பிறந்த அனைவரும் சரியான வயதிற்கு பின்னர் துணையாக துணை ஒன்றை தேர்ந்தெடுத்து அவருடன் வாழ்வதும்., தனக்கான சந்ததியை உருவாக்கும் நோக்கில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகும். தாம்பத்தியத்தை பொறுத்த வகையில் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் இருக்கும்.
அந்த வகையில்., எந்தெந்த நேரத்தில் தாம்பத்தியம் வைப்பதன் மூலமாக என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் நல்ல தீர்வுகள் என்ன என்பது குறித்து இனி காண்போம். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் அதிகாலை தாம்பத்தியம் உடலுக்கு நன்மையை வழங்குகிறது. காலையில் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியத்தின் மூலமாக இரத்த கொதிப்பு மற்றும் மன அழுத்தமானது குறைகிறது.
பெண்களை பொறுத்த வரையில் மாதவிடாய் சுழற்சியின் 14 வது நாள் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியத்தின் மூலமாக கருவானது 20 விழுக்காடு பெரியதாகவும்., ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் மாதவிடாய் சுழற்சியின் 14 வது நாள் தாம்பத்தியத்தை வைத்துக்கொண்டால் கருத்தரிக்க அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.
தினமும் உடற்பயிற்சி செய்த பின்னர் உடலின் இரத்த ஓட்டமானது நன்றாக சீரடைகிறது. இதன் மூலமாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரித்து., தாம்பத்தியத்தில் அதிகளவு இன்பத்தை பெறவும்., வழங்கவும் இயல்கிறது. இதன் காரணமாக உடற்பயிற்சிக்கு பின்னர் தாம்பத்தியம் மேற்கொள்வது இருதுணைக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.
அதிகளவு வேலைப்பளு மற்றும் பிற பளுவின் காரணமாக அவதியுறும் நபர்கள் முழு மனதுடன் தயாராகி தாம்பத்தியத்தை துவங்கினால் அதிகளவு மன அழுத்தமானது தாம்பத்தியத்திற்கு பின்னர் குறையும். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் விரும்பமில்லாத அல்லது அரை தூக்க கலக்கத்துடன் கூடிய உறவானது இரு துணைக்கும் சலிப்பை ஏற்படுத்தும். ஆகையால் இருவரும் முழுமனதுடன் இருக்கும் சமயத்தில் தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.