ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணி ரசிகர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியதால் பதட்டம் ஏற்பட்டது.
ஆப்கான், பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன்பாக இரு ரசிகர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதன் 36வது லீக் போட்டியில் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கான் அணிக்கு 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு இளம் ஷாகின் அப்ரிடி, 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் டீனேஜ் வீரர் என்ற புது வரலாறு படைத்தார்.
இந்நிலையில் இப்போட்டி துவங்கும் முன்பாக இரு நாட்டு ரசிகர்களும் தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதை மைதான பொலிஸார் தடுக்க முயன்ற போதும் அவர்களை மீறி இரும்பு பேரிகார்டு கம்பிகளை கொண்டு அடி தடியில் ரசிகர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐசிசி., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே அடி தடியில் ஈடுட்டனர். அவர்களை உள்ளூர் வெஸ்ட் யார்க்ஷய பொலிஸார் கைது செய்தனர். அதன் பின் எவ்வித அசம்பாவிதமும் இல்லை என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.
இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான ரசிகர்களின் கொண்டாட்டங்கல் இது போன்ற சில சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றார்.
Few of them were ejected from stadium by security, many invaded the stadium jumping the wall, occupying seats without tickets. Ugly scenes! Anti sportsmanship by Afghan fans. Disappointing. https://t.co/XKftrpLqDh
— Faizan Lakhani (@faizanlakhani) June 29, 2019
Hi everyone, that was me who got beaten up. I’m fine right now bit really shaken up.
The Afghan fan just surrounded me and starting abusing me and Pakistan. Why do this to me? ?#PAKvAFG https://t.co/FYVf6hpbln
— Nostradamus. (@PximeWazza) June 29, 2019