பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலர்ட் நீக்கப்பட்டுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பிரான்சில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. கடுமையான வெப்பம் காரணமாக பிராந்தியத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிரான்சின் தெற்கு பகுதியில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் வரலாறு காணாத வெப்ப நிலையும் பதிவானது. எனினும்,தலைநகர் பாரிஸில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.
தெற்கு பிரான்சில் நைம்ஸுக்கு அருகிலுள்ள கல்லர்குஸ்-லெ-மான்டியூக்ஸில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 45.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததாக மெட்டியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும், வடக்கு பிரான்ஸ் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது. தெற்கில் சராசரி வெப்பநிலை அதிகமாக இருப்பதாக மெட்டியோ பிரான்ஸ் கூறுகிறது, பல நிர்வாக பகுதிகள் இன்னும் மூன்றாம் நிலை ஆரஞ்சு வெப்ப அலை எச்சரிக்கையில் உள்ளன என குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், கடந்த யூன் 23ம் திகதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலர்ட் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.