வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்றிரவு (01) 9.20 மணியளவில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக பொலிஸாரினால் மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது.
வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள (இருந்து மது அருந்தும்) மதுபானசாலையில் சில நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
மோதலில் ஈடுபட்டிருந்த நபர்கள் மதுபானசாலைக்குள் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன் வெளியிலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலைமை காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் அவ்விடத்தில் நிலவிய பதட்டத்தினை நீங்கியதுடன் மதுபானசாலையினை மூடுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தமையினையடுத்து மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது
அத்துடன் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
குறித்த மதுபானசாலையில் தினசரி இவ்வாறான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.