கடந்த மாதம் ஜுன் 23ம் திகதி பிரபல ரிவியில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ஆரம்பித்த தினத்திலிருந்தே சண்டைகள் ஓயாத வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றன.
நேற்றைய தினத்தில் கூட மதுமிதாவிற்கும் வனிதாவிற்கும் இடையிலும், கவின், மீராவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோகன் கோபமடையும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இன்றும் சண்டையுடனே ஆரம்பித்துள்ளது. அபிராமி முகேனை காதலிப்பதாக இருந்தால் நான் நேரடியாக சொல்லுவேன். எவளுக்காவது பிரச்சனை இருந்தால் உங்களோடே வைச்சிக்கோங்க என்று ஆரம்பித்துள்ளது.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் காதலில் சொதப்புவது எப்படி? என்ற கேள்விக்கு கவினின் பதில் ஒட்டுமொத்த போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. பதிலை நீங்களே பாருங்க…