உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், வங்கதேச அணிக்கே பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இதில் இந்த லீக் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்திய அணி, நேற்று வங்கதேச அணியிடம் போராடி தான் வென்றது. குறிப்பாக பும்ரா தான் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடைசி வரை வெற்றிக்காக போராடிய வங்கதேச அணியை சிலர் பாராட்டியும் வருகின்றனர்.
இது குறித்து பிரபல பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் வீரர் சக்தி, கடைசி 2 போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை.
குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் பந்து வீச்சு கவலை தரும் படி இருந்தது. ஆனால் வங்கதேச அணியின் போராட்டம் பாராட்டும் வகையில் இருந்தது.
இறுதி விக்கெட் விழும்வரை இந்தியா வெல்லும் என்று நிச்சயமாக கூறமுடியாத நிலை இருந்தது. போட்டியை வென்றது இந்தியாவாக இருந்தாலும், ரசிகர்களை கவர்ந்தது என்னவோ ரசிகர்களை கவர்ந்தது வங்கதேசம் அணியின் பேட்டிங் மற்றும் இறுதிக்கட்ட பந்துவீச்சு ஆகியவைதான் என்று கூறியுள்ளார்.