சிங்கள இளைஞரொருவரை திருமணம் முடித்த முஸ்லிம் பெண்ணொருவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து பொதுபலசேனா அமைப்பு பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் கிரிபத்கொடவிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு, இந்த பெண்ணும் அழைத்து வரப்பட்டிருந்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீருடன் உரையாற்றினார்.
2008ஆம் ஆண்டு தான் சிங்கள இளைஞரொருவரை திருமணம் முடித்த பின்னர், பண்டாரகம- அட்டளுகம பிரதேசத்தின் மாராவ பிரதேச முஸ்லிம் மக்களால் தொடர்ந்து பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இப்பெண் தெரிவித்துள்ளார்.
அப்துல் ஹசாத் பாத்திமா ஹைபம் (38) என்பவரே தனக்கு நேர்ந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்தினார்.
தனது கணவனையும் மதம் மாறும்படியும், சலுகைகள் தருதாகவும் கூறியபோதும், கணவன் அதை ஏற்கவில்லை.
இது மார்ச் 24 அன்று நடந்தது. ஏப்ரல் 06 கிராம சபை போல பிரச்சினை தீர்க்கப்பட்டது.
பிரதான சந்தேகநபர் ஒரு இரவில் பொலிசாரால் விடுவிக்கப்பட்டார். எங்கள் வீட்டு சேதங்களை திருத்த 22,000 ரூபா தந்தார்கள்.
எனது மகளையும் முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க எனக்கு விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசாரதேரரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.