இந்தியாவில் 8 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமானதால், மும்பையில் கடந்த சில தின நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக
சாலை மற்றும் இரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் இருக்கும் குடிசைப்பகுதியில் வீட்டின் சுவர் தொடர் மழை காரணமாக தாங்க முடியாமல் திடீரென்று இடிந்து விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த கோர சம்பவத்தில் பிரியா நானாவரே என்ற 8 வயது சிறுமி ஒருவர் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கிறார். அவர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வெளியில் விளையாட சென்றுவிட்டு, வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவர் உயிர் தப்பியுள்ளார்
இதில் பிரியாவின் தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகிய அனைவரும் விபத்தில் பலியாயினர். தனது சிறு வயதிலேயே, மொத்த குடும்பத்தையும் பிரியா இழந்து நிற்பது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி பிரியாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்போரை கண்கலங்க வைக்கிறது.