டயானா பிரிட்டன் மட்டுமின்றி, உலக மக்களாலும் மறக்க முடியாத பிரிட்டிஷ் பிரின்சஸ். இவரது சமூக சேவையில் துவங்கி, மரணம் வரை அனைத்தும் உலகறிந்த செய்தியாக மட்டுமின்றி, மனதை விட்டு நீங்காவண்ணம் அமைந்தன.
இன்று வரை இவரது மரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற மர்மம் விலகாமல் நீடிக்கிறது. இவரது மரணத்தில் மட்டுமல்ல, இவரது சிகையலங்காரத்திற்கு பின்னணியிலும் கூட இரகசியங்கள் மறைந்திருக்கின்றன…
பிரபலங்களின் ஸ்டைலிஸ்டான சாம் மேக்நைட் நீண்ட நாள் கழித்து தனது புதிய புத்தகமாக ‘ஹேர் பை சாம் மேக்நைட்’ புத்தகத்தில் டயானாவின் சிகை அலங்கார இரகசியங்கள் குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
1990-ல் பிரிட்டிஷ் வோக் நாளிதழ்-காக டயனா போஸ் கொடுக்க கேட்டுகொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் பேட்ரிக் என்பவர் தனது சொந்த மேக்கப், ஸ்டைலிஸ்ட் குழுவையே அழைத்து வர ஒப்புதல் பெற்றிருந்தார். அந்த குழுவில் சாம் மேக்நைட்-ம் ஒருவர்.
அப்போது டயானா என தெரியாமல், அவரை அழகுப்படுத்த சென்றார். அப்போது அவரது சிகை அலங்காரம் நன்றாக இல்லை என தனது கருத்தை தெரிவித்தார். அப்போது டயானா, எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என கேட்க, ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல் தான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார் சாம் மேக்நைட்.
அதன் முன்பு வரை சற்று நீளமான கூந்தல் வைத்திருந்த டயானா, ஷார்ட் கட் ஹேர் ஸ்டைலுக்கு மாறினார். இன்று வரை டயானா என்றால் மக்களுக்கு சட்டென்று நினைவிற்கு வருவது அவரது ட்ரேட்மார்க் சிகை அலங்காரம் தான்.
ப்ரைவேட் போடோஷூட் போது பெரிதும் பதட்டம் இல்லை என்ற போதிலும், முதல்முறையாக பொது நிகழ்விற்கு செல்லும் போது டயானா சற்று பதட்டமாக தான் இருந்தார். ஆனால், இவரது அந்த ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது.