வவுனியா – மருக்காரம்பளை வீதி பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் சடலமாக இன்று (22) காலை மீட்கப்பட்டடுள்ளார்.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அங்கு காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்து தனியாக தனது பத்தினியார் மகிழங்குளம் வீட்டில் தங்கியிருந்து வீட்டை திருத்தம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றும் வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றிருந்ததாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மணல் இறக்குவதற்காக இன்று காலை வந்த டிப்பர் சாரதியே வீட்டின் உரிமையாளர் வாசலில் சடலமாக இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் அண்மையிலேயே வவனியாவிற்கு வருகை தந்து இவரை பார்வையிட்டு சென்றதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இவர் இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.