கனடாவில் பொது இடத்தில் தனது பிள்ளைகள் முன்னிலையில் ஒரு ஜோடி மோசமாக நடந்து கொண்ட நிலையில், தான் அது குறித்து புகாரளித்தும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாயார் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Armstrongஇல் வசிக்கும் Jamie Wlesanko, வார இறுதி நாட்களில் Kelownaவில் இருக்கும் தனது குடும்பத்தை சந்திக்க வருவதுண்டு.
அப்படி வரும்போது அங்குள்ள பூங்காவில் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது அவரது வழக்கம்.
ஒரு நாள் அப்படி பூங்காவிற்கு சென்றிருந்தபோது, Wlesankoவின் மகள் அவரிடம், அம்மா அந்த பெண்கள் உடைகளை களைந்து அந்தரங்க உறுப்புகளைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
திரும்பிப் பார்த்த Wlesanko, இரண்டு பெண்கள், பொது இடத்தில், சிறுவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல், மோசமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்தப் பெண்களிடம் சென்று, தயவு செய்து பிள்ளைகள் முன்னால் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
உடனே அவர்களில் ஒரு பெண், நீ ஓரினச்சேர்கையாளர்களுக்கு எதிரானவள் என சத்தமிடத் தொடங்கியுள்ளார்.
இல்லை எனக்கு அதைக் குறித்தெல்லாம் கவலையில்லை என்று கூறிய Wlesanko, நீங்கள் என் பிள்ளைகள் முன்னால் உங்கள் உடலைக் காட்டுகிறீர்கள், தயவு செய்து பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஆண் அவர்களிடம் சென்று அப்படி செய்ய வேண்டாம் என்று கூற, அவர் முன்பும் மோசமான செயல்களை செய்து காட்டிய அந்த பெண்கள், அவரையும் கேலி செய்திருக்கிறார்கள்.
பின்னர் Wlesanko பொலிசாரை அழைத்திருக்கிறார். பொலிசாரோ, Kelownaவில் பெண்கள் மேலாடையின்றி நடமாடுவது சட்ட விரோதம் இல்லை, ஆண்களைப்போலவே பெண்களும் மேலாடையின்றி நடமாடலாம் என்று கூறி விட்டிருக்கின்றனர்.
பொலிசார் வந்து ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று வருத்தத்துடன் கூறும் Wlesanko, இங்கே இப்படித்தான் நடக்கும் என்றால், இனி என் குழந்தைகளை இங்கு அழைத்துக் கொண்டு வரப்போவதில்லை அவ்வளவுதான் என்கிறார்.