பிடிபட்டால் அவ்வளவுதான், நாடு கடத்தி விடுவார்கள் என்று கூறும் இந்திய இளைஞர் ஒருவர், நான் எந்த தவறும் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார்.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் குமார்.
பத்து ஆண்டுகளாகிவிட்டது அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து. மாணவர் விசா காலாவதியானதும், spousal விசாவுக்கு முயற்சி செய்யும் நேரத்தில் காதலியைப் பிரிய வேண்டியதாயிற்று.
புதிய விசா பரிசீலனையிலிருக்கும்போது குமார் நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
எனவே சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடிவு செய்தார் குமார். அதனால் அவரால் வேலை எதிலும் சேர முடியாது, படிக்க முடியாது, வீடு வாடகைக்கு பிடிக்கக்கூட முடியாது.
எனவே எங்கேயாவது தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து கொண்டு, சில நேரங்கள் சாப்பிட்டும், சில வேளைகள் பட்டினி கிடந்தும், சில நேரங்களில் வேலை செய்தும் கூலி கொடுக்காமல் ஏமாற்றப்பட்டும் பொலிசாரிடம் செல்லாத நிலைமையிலும் வாழ்ந்து வருகிறார் குமார்.
சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லலாமே என்றால், நான் எந்த தவறும் செய்யவில்லை, இந்த நாட்டின் சிஸ்டம்தான் தவறு என்று கூறும் குமார், எனக்கு விசா வேண்டும் அவ்வளவுதான் என்கிறார்.