தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் பல்வேறு நாடுகளின் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் திகதி படுகொலை செய்யப்பட்டார். சிலர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பில் மத்தளம்பாறையில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஷாலி என்ற மைதீன் அகமது ஷாலி (51) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பொலிசார் திடீரென மைதீன் அகமது ஷாலியின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.
இதுதொடர்பாக மைதீன் அகமது ஷாலியின் உறவினர்கள் கூறுகையில், இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என கூறினர்.
மேலும், இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.