Loading...
திருகோணமலை அக்போபுர பகுதியில் மது போதையில் தனித்திருந்த பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்த நபரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...
சந்தேக நபர் அக்போபுர பகுதியில் தனிமையிலிருந்த பெண்ணொருவரின் கையைப் பாலியல் ரீதியில் பிடித்திழுத்ததாக அப்பெண் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Loading...