Loading...
உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் சகல நன்மைகளையும் வழங்கும் எலுமிச்சை பழச்சாறினை அன்றாடம் காலையில் குடித்துவந்தால் செரிமானக்கோளாறு பிரச்சனைகள் குணமாகும்.
Loading...
கால்சியம், விட்டமின் சி, விட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
எலுமிச்சையின் 6 நன்மைகள்
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.
- எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சாற்றுடன், சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
- எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
- எலுமிச்சையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
- எலுமிச்சையில் விட்டமின் `சி’ அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த விதமான நோய் தாக்கு தல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
- எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும்.
Loading...