விஜய்க்கு சரியான போட்டி அஜித் தான் என்று நாலாப்பு படிக்கிற பையன் கூட சொல்லும் நிலையில், சமீபகாலமாக விஜய் சூர்யாவுடன் பனிப்போர் புரிந்து வருகிறார். அட ஆமாங்க..!
தீபாவளிக்கு s3 மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்ற அறிவித்த அன்றே பைரவா டீசர் வீடியோ வரும் என்று அறிவித்தார் விஜய்.
சரி, தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நடிகர்களும் தங்களது ரசிகர்களை திருப்திபடுத்த வெளியிட்டதாக எடுத்துக்கொள்வோம்.
சில தினங்களுக்கு முன், அதாவது நவம்பர் 17-ம் தேதி சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கிய சில மணி நேரத்தில், அவசர அவசரமாக விஜய்61 படத்தின் அறிவிப்பை துரிதமாக எளிமையான ஒரு வீடியோவுடன் அறிவித்தார் விஜய். விஜய்-ன் அறிவிப்பு சூர்யாவின் அறிவிப்பை லபக்கென்று விழுங்கி சில நிமிடங்களின் நம்பர் 1 ட்ரெண்டிற்கு வந்தது #Thalapthy61.
ஏன்? பொறுமையாக இருந்து அதிரடியான ஒரு வீடியோவை தயார் செய்து அறிவித்திருக்கலாமே. சரிங்க.. இதுவும் எதேர்ச்சையாக நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
சூர்யாவின் சிங்கம் படத்தை இந்த வருடம் டிசம்பர் 16-ம் தேதி வெளியிடுவதற்கு பதிலாக பொங்கல் பரிசாக ஜனவரி12-ம் தேதி வெளியிடலாம் என்று சூர்யா வேண்டுகோள் வைத்திருந்த நிலையில், அதிரடியாக விஜய்-யும் தன் பங்குக்கு பைரவா படமும் ஜனவரி 14-ம் தேதியில் இருந்து ஜனவரி-12ம் தேதிக்கு மாற்றி வெளியிடலாம் என்று தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இதுவும் எதேர்சையாக நடந்தது தானா…? என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை, தெரிஞ்ச எதிரி(அஜித்)ய விட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகமா இருக்கணும் என்று சூர்யாவைத்தான் தெரியாத எதிரி-ன்னு சுட்டி காட்டுகிறாரோ விஜய்.