உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் உற்சாகப்படுத்தினார். அவர் குறித்து நெகிழ்ச்சியுடன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அத்துடன், உலக கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் இந்த போட்டியை காண வந்தனர். அப்போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.
அவர் வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.