Loading...
மும்பையில் நடந்த 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் ரஜினியை வாழ்த்து கோஷம் எழுப்பியபடி வரவேற்றனர்.
Loading...
பின்னர் ரஜினி அவர்களிடையே பேசும்போது… “2.ஓ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை சென்றிருந்தேன். விழா சிறப்பாக நடந்தது நீங்களும் பார்த்திருப்பீங்க. விமான நிலையம் வரை வந்து என்னை வரவேற்றதற்கு நன்றி” என்று கூறியவரிடம். 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்கவே, “2.ஓ போஸ்டர் பார்த்தீங்களா நல்லா இருந்திச்சா?” என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தெறித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Loading...